பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரியில் இன்று காலை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.
இந்த கோர விபத்தில் லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (30), வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கல்குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார்.