தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பெயரில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டாயிரத்து பதினேழு பதினெட்டாம் ஆண்டில் காவல்துறைக்கு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. iந்நிலையில் வாக்கிடாக்கி வாங்கிய முறைகேடு புகார் தொடர்பாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது பொறுப்பில் இருந்த டிஎஸ்பி, எஸ்பி ஆகியோர் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.