உத்திர பிரதேசம் மாநிலம் பாகிஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் சத்தமாக அலறி அழுது, தலை குனிந்து பயங்கரமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பல மாணவிகள் ஆவேசமாக தரையில் விழுந்து உருண்டு கதறி அழுத காட்சி ஆசிரியர்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சிலர் இரண்டு நாட்களுக்கு முன்பு இதே போல் நடந்து கொண்டனர். அதன் பிறகு பெரும்பாலான பள்ளி மாணவர்களும் இப்படியே நடந்து கொள்ள தொடங்கியதை தொடர்ந்து இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் விமலா கூறியதாவது: “எங்கள் பள்ளியில் சில மாணவர்கள் விசித்திரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் சத்தமாக அழுது கூச்சல் இடுவது மற்றும் வியர்த்து கொட்டுவது, தலைகுனிந்து உட்காருவது போன்று செயல்களில் ஈடுபட்டனர்கள். இதை பார்த்து நாங்கள் அஞ்சினோம். மாணவிகளின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தோம். இந்த பிரச்சினை எதற்காக நடைபெறுகின்றது என்பதை குறித்து டாக்டரை வரவழைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவ குழுவினர் மாணவர்களிடம் கவுன்சிலிங் மேற்கொண்டனர். அப்போது சில நாட்களுக்கு முன்பு அங்கு வெள்ளப்பெருக்கில் மாணவர்களின் கிளாஸ்மேட் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். அந்த சோகத்தில் இருந்து வெளி வராத மாணவிகள் இப்படி நடந்து கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.