Categories
சினிமா

ரன்வீருக்கு ஆடை சேகரிக்கும் தொண்டு நிறுவனம்… . சமூக வலைதளத்தில் வைரல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். இவரின் சிங்கின் ஆடை ஸ்டைலு தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பத்திரிகை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனையடுத்து ரன்வீர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் புகார் அளித்தது.

அந்த புகாரின் அடிப்படை மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவரது கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய வகையில் அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது அங்குள்ள சாலை. ஓரத்தில் மேசை மீது ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்தை ஒட்டிய பெட்டி வைத்துள்ளனர். அந்த பெட்டிக்குள் பலர் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் நன்கொடை வழங்கும் விதமாக பழைய பேண்ட், சட்டை, பனியன், டீசர்ட் போன்ற துணிமணிகளை கொண்டு வந்து போடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |