அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தொலைபேசியில் இரண்டு மணி நேரங்கள் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகை, ஜனாதிபதி ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு நாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரங்களாக தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள்.
அப்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு, சர்வதேச அரசியல் தொடர்பில் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.