தமிழகத்தில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதக விளம்பரப்படுத்தி OLX செயலி மூலம் மோசடி நடப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக, OLX தளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை காவல்துறை எச்சரித்துள்ளது.
பணம் பறிக்கும் நோக்கில் இப்படியான விளம்பரங்களை மோசடி கும்பல் அளிப்பதாகவும். மேற்படி பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இது தொடர்பாக யாராவது பணம் கேட்டால் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.