விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள காவட்டுநாயக்கன்பட்டி-கூவலப்புரம் சாலையில் இருக்கும் கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலாஜி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தாய் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என பெற்றோர்கள் நினைத்து விட்டு பொருட்படுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனை அடுத்து சாமிராஜ் என்பவர் விவசாய கிணற்றில் ஆண் உடல் ஓன்று சடலமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் கிடந்த உடலை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்டுள்ளனர். மேலும் இறந்த நபர் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது திமுக பிரமுகர் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது.