தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகள் அடுத்தடுத்த தற்கொலை செய்துவரும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெற்றோர்களுக்கு இடையே அச்சம் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழக அரசின் சார்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் சமூக வலைதளங்களில் தெரியாதவர்களுக்கு ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுப்பது பேராபத்தில் சென்று முடியும் என எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘இணையத்தை தவறாக பயன்படுத்துவதால்தான் ஏராளமான பெண் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி குழந்தைகள் டிவி சீரியல் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும், தவறான வழியில் நம்மை அடிமையாக்கும் ஆபத்து சீரியல்களிடம் உள்ளது’ என கூறினார்.