Categories
தேசிய செய்திகள்

8ம் வகுப்பு மாணவனை கடத்தி….. பாலியல் இச்சை செய்த பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!!

8ம் வகுப்பு மாணவனை கடத்தி வாடகை வீட்டில் தங்கி, பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவைச் சேர்ந்த முப்பது வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவனை கடத்திச் சென்றதாகவும், இருவரையும் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் இருந்து கண்டுபிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நண்பர்களை சந்திக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், அருகில் வசிக்கும் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண்ணையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணும் 15 வயது சிறுவனும் ஹைதராபாத்தில் வாடகை வீட்டில் வசிப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. ஹைதராபாத் சென்றதும் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடத்திச் சென்ற பெண், 15 வயது சிறுவனை இதற்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |