பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து உண்டியலில் தங்கம், பணம், வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தினர். இந்நிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. அதில் 1 கோடியே 93 லட்சத்து 57 ஆயிரத்து 137 ரூபாய் பணமும், 544 கிராம் தங்கமும், 13 ஆயிரத்து 544 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்துள்ளது.