Categories
மாநில செய்திகள்

கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்கள் குளிக்க தடை….!!!!!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து  தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை குரங்கினி வனப்பகுதியில் மழை காரணமாக கொட்டக்குடி  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கில் ராட்சச மரங்கள் அடித்து வரப்பட்டு அணைக்கட்டின் மேல் பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது.

இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் அணைக்கட்டு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து இருக்கின்றனர். மேலும் இந்த நிலையிலும் மக்கள் அதனை பொருட்படுத்தாமலும் அங்குள்ள ஆபத்தை உணராமலும்  அணைக்கட்டு நீர்வீழ்ச்சி பகுதிகளில் குளித்து வருகின்றார்கள். அதிலும் அணையின் மேல் பகுதியில் நீருக்கு இடையே பொதுமக்கள் கடந்து சென்று ஆபத்தான நிலையில் குளித்து வருகின்றார்கள். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி காவல்துறையினர் அணைக்கட்டு பகுதியில் பாதுகாப்பு வழங்கி பொதுமக்களை குளிக்க விடாமல் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |