தொடர் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகளுக்கும், ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வீரபாண்டியில் உள்ள தடுப்பணையிலும் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.