Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த பிலிப்பைன்ஸ்…. 5 பேர் உயிரிழப்பு…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3-ஆக பதிவாகியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பதறிய மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் குவிந்தனர். மேலும் அப்ரா என்னும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது.

எனவே, அங்குள்ள குடியிருப்புகள், தேவாலயங்கள் மற்றும் கடைகள் போன்ற பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி ஐந்து நபர்கள் உயிரிழந்ததாகவும் 100க்கும் அதிகமான மக்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |