ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில தினங்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் கடந்த 5 ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 8 சம்பவங்கள் அவ்வாறு நடைபெற்றது பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை டிஜிசிஏ நேற்று விதித்துள்ளது.
அதன்படி அடுத்த எட்டு வாரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களில் 50% மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் டிஜிஏவின் மேம்பட்ட கண்காணிப்பு இந்த நிறுவனத்தின் விமானங்கள் உட்படுத்தப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அக்டோபர் 29ஆம் தேதி வரையிலான நடப்பு கோடை கால அட்டவணையின் படி 4,192 வாராந்திர உள்நாட்டு விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் அனுமதி வாங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது டிஜிஏ உத்தரவின் படி 2,096 விமானங்கள் மட்டுமே இயக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.