தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சுவர்களில் சேதம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அது குறித்து அரசு துறைகளிடம் வேண்டுகோள் விடுத்து விரைந்து சரி செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் விரிசல் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மின்விசிறி, லைட்டுகளுக்கு மின்சாரம் செல்லும் ஒயர்களும் சேதம் அடைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இன்னும் ஒரு சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. அதனால் அரசு மற்றும் வாடகை கட்டிடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் சேதம் ஏற்பட்டிருந்தால் மின்வாரியம், மாநகராட்சி மற்றும் வாழ்விட மேம்பாட்டு வாரிய துறைகளிடம் வேண்டுகோள் விடுத்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.