Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தாம்பரம்-நெல்லை பயணம் இனி ரொம்ப ஈசி…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை தாம்பரம் -திருநெல்வேலி இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி -தாம்பரம் இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மற்றும் செப்டம்பர் 4 ஆம் தேதி இயக்கப்படும். மருமார்கமாக தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே இரவு 10.20 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற ஆகஸ்ட் 8, 15,22,29, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

அதனைப் போலவே விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே மதிய 3.55 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற ஆகஸ்ட் 7, 14, ,21, 28, செப்டம்பர் 4, 11,18,25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மேலும் பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினம் இடையே மதியம் 2.50 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற ஆகஸ்ட் 8, 15,22,29, செப்டம்பர் 5, 12,19,26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |