ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதற்கான அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்படும். ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை. அதுபோக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனைத் தவிர பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 7 – ஞாயிறு
ஆகஸ்ட் 9 – முஃகர்ரம்
ஆகஸ்ட் 13 – இரண்டாம் சனிக்கிழமை
ஆகஸ்ட் 14 – ஞாயிறு
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 – கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 21 – ஞாயிறு
ஆகஸ்ட் 27 – நான்காம் சனிக்கிழமை
ஆகஸ்ட் 28 – ஞாயிறு
ஆகஸ்ட் 31 – விநாயகர் சதுர்த்தி