தமிழகத்தில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள அனைத்து மின் இணைப்புகளையும் துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு மின்வாரிய முத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சார வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. அந்த சலுகையை பெறுவதற்கு ஒரு சிலர் முறைகேடாக ஒரே வீட்டிற்கு கூடுதலாக இரண்டு அல்லது மூன்று மின் இணைப்புகளை பெற்றுள்ளனர்.வீட்டு பிரிவில் மின் இணைப்பை பெற்று உள்ளவர்கள் வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
மேலும் வணிக நிறுவனங்கள்,விதிகளை மீறி எலும்பியுள்ள தலங்களுக்கு முறைகேடாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் வருடத்திற்கு மின்வாரியத்திற்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. இந்நிலையில் மின் திருட்டை தடுக்க, மின் இணைப்புகளில் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக முழுவதும் முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதை துண்டிக்க அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.