Categories
மாவட்ட செய்திகள்

“மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்”….. 8 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு…!!!!

மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் எட்டு நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்  பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகள் நீர் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. பின் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவும் நிரம்பியதால் நீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அணைக்கரை பகுதியைச் சேர்ந்த மனோஜ், ஆகாஷ், ராஜேஷ், கொளஞ்சிநாதன் உள்ளிட்ட நான்கு பேர் சென்ற 18ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நான்கு பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

அதில் கொளஞ்சிநாதனை மீட்பு குழுவினர் மீட்டார்கள். பின் மற்ற மூன்று பேரையும் தீயணைப்புத் துறை தேடி வந்த நிலையில் மனோஜ் மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட இருவரை பிணமாக மீட்டார்கள். ஆனால் ராஜேஷ் மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் அவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Categories

Tech |