பீகாரில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக அளவாக அராரியா மாவட்டத்தில் மொத்தம் உள்ள 229 பள்ளிகளில் 244 பள்ளிகளில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லை.
முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த பகுதியில் மட்டும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஜார்க்கண்டிலும், ஜம்தரா மற்றும் தும்காவில் பள்ளிக்கூடங்களில் விடுமுறை தினம் வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.