Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே…..! உங்களுக்கு தெரியுமா?…. இதற்கு கூட லோன் கிடைக்கும்….!!!!

வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் வீட்டை புதுப்பிக்கவும் வீட்டின் மாடலை மாற்றுவதற்கும் வங்கி கடன் வழங்குகிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு பெயர் தான் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன். ஏற்கனவே நீங்கள் வீட்டு கடனில் வாங்கிய வீட்டையும் புதுப்பிப்பதற்கு அல்லது புதிய தலங்கள், அறைகள் சேர்ப்பதற்கு கூட கூடுதல் கடன் பெறலாம். இது டாப் அப் லோன் என்று அழைக்கப்படுகிறது. பெருநகரங்களில் நீங்கள் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கு 10 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது .

அதைத்தவிர டயர் டூ, டயர் 3 நகரங்களில் வசிப்பவர்கள் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் அப்ளை செய்யும்போது ஆறு லட்சம் கடன் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு 6.55% -10.99% வட்டி விதிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் ஆகும். வீட்டை புதுப்பிக்க எவ்வளவு செலவாகும் என்பதற்கான கொட்டேஷன் அதற்கு வழங்க வேண்டும். வருமான வரி சட்டம், பிரிவு 24b இன் படி, வீட்டு மேம்பாட்டுக் கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டியில் ஆண்டுக்கு ரூ.30,000 வரை வருமான வரியில் விலக்காக பெறலாம். அதிக கிரெடிட் ஸ்கோர் உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் வலுவாக இருப்பதை குறிக்கிறது. அப்படியானால் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.

Categories

Tech |