மதுரை கோட்ட ரயில்வே சார்பில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகின்ற 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 9:15 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைகின்றது. மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு 5. 15 மணிக்கு மீண்டும் மதுரை வந்து சேருகிறது. மேலும் இந்த ரயில்கள் கீழ் மதுரை, சிலைமான், திருபுவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதன், உச்சி புள்ளி போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது.
Categories
வருகிற 28ஆம் தேதி முதல்…. மதுரை ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!!!!!!
