ஐஸ்வர்யா செய்த காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றார்கள்.
நடிகர் தனுஷும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் வருடம் காதலித்த திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக இணையத்தில் அறிவித்தார்கள். தற்பொழுது ஐஸ்வர்யா தனது மகன்களுடன் அப்பா ரஜினி வீட்டில் வசித்து வருகின்றார். இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா செய்த காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றார்கள். பாலிவுட் நடிகை சாரா அலி கான் மும்பையில் நடந்த பார்ட்டியில் தனுஷை சந்தித்ததில் மகிழ்ச்சி என இன்ஸ்ட்ரா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த தனுஷும் என் ரிங்குவை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிலளித்திருந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தான் போனி கபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் வெளியிட்டு போனி கபூர் அங்கிளை சந்தித்தது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் இது தனுஷின் ஸ்டோரீஸ் போலவே இருக்கிறதே. அவரின் ஸ்டோரீஸில் இருப்பது போலவே இருக்கின்றதே என விளாசுகின்றார்கள்.