திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மீதம் உள்ள வாக்குறுதிகள் விரைவில் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் திமுக அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாக்குறுதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்புதான். ஆனால் தற்போது நிதிநிலைமையை காரணம் காட்டி தொடர்ந்து அந்த திட்டம் தள்ளி போகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த மகளிர் உரிமைத் தொகையானது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். ஆனால் தற்போது அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் உரிமைத்தொகை பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து வழங்குவோம் என்றார் நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட்டின் போது, நிதி நிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புது நிலைப்பாடு எடுத்தார் நிதி அமைச்சர். இதனையடுத்து தமிழகத்தின் நிதிநிலை குறித்து விவாதிக்க முதல்வர் நிதி அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மக்கள் வலியுறுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.