Categories
தேசிய செய்திகள்

எருமை மாட்டின் மீது தீராத பாசம்…. சிறுமி அடுத்த விபரீத முடிவு…. பெரும் சோக சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் உள்ள குரோனா என்ற கிராமத்தை பைனி கெவாட் மூன்று எருமை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவரின் மகள் ரஜினி எருமை மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது முதல் தண்ணீர் காட்டுவது வரையிலான அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். தனது வீட்டில் உள்ள எருமை மாடுகள் மீது அதிக பாசம் கொண்ட சிறுமி ரஜினி பெரும்பாலான நேரத்தை அவற்றுடன் செலவழித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 8ம் தேதி எருமை மெய்ச்சலுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அது திரும்பி வரவில்லை என்றும் தந்தை கூறினார். அதனால் சோகத்தில் இருந்து வந்த சிறுமி,எருமை மாட்டை இழந்ததால் கடந்த ஜூலை இருபதாம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |