Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி…. ஆசிரியரிடம் கூறிய அதிர்ச்சி உண்மைகள்…. போலீஸ் அதிரடி…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 16 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கூறிய தகவலை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சடைந்தனர். அதாவது மாணவியின் தாயார் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவியும் அவரது சகோதரனும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கட்டிட தொழிலாளியான சதீஷ்குமார்(24) என்பவர் மாணவியின் வீட்டிற்கு சென்ற போது அவருக்கும், மாணவியின் சகோதரருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் சதீஷ்குமாரும், சகோதரனும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அங்கு சென்ற சதீஷ்குமார் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அந்த மாணவி அச்சத்தில் இருந்ததால் சதீஷ்குமார் தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் மாணவி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தது தெரியவந்தது. இது குறித்து ஆசிரியர்கள் மாணவியின் தாயாரிடம் தெரிவித்தனர். பின்னர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |