கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியான நிக்கோல் ஷனாஹனுடன் எலான் மாஸ்க் காதல் வசப்பட்டுள்ளார் என அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலக பணக்காரர்களின் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க். தற்போது இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். பின்னர் அடுத்த ஆண்டே இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர். பின்பு 3 வருடம் மட்டுமே நீடித்த இவர்களது உறவு 2016-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. டலுலா ரிலேவை என்ற நடிகையை எலான் மஸ்க் இரண்டு முறை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கிரீம்ஸ் என்கிற பாடகியை காதலித்த எலான் மஸ்க் அவரை திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இந்த உறவும் 3 ஆண்டுகளில் கசந்துபோக அவரை விட்டு பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தார் .
இந்நிலையில் தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது மீண்டும் காதல் வலையில் விழுந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்டாஷா பஸ்செட் என்கிற நடிகையை அவர் தற்போது காதலித்து கொண்டு வருகிறார். அவருடன் அவ்வப்போது டேட்டிங்கும் சென்று வருகிறாராம் எலான் மஸ்க். 50 வயதாகிய எலான் மஸ்க் 27 வயதாகும் நடிகை நட்டாஷா பஸ்செட்டை காதலித்து வருவது தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் கூகுள் இணை நிறுவனத்தின் கோடீஸ்வரருமான செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனாஹனுடன் எலான் மஸ்க் காதல் வசப்பட்டுள்ளார் என அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் இதனை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இது குறித்து எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “செர்ஜியும் நானும் நண்பர்கள் மற்றும் நேற்றிரவு ஒன்றாக ஒரு விருந்தில் இருந்தோம். நான் நிக்கோலை மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பார்த்தேன், இரண்டு முறையும் பலர் உடன் இருந்தனர். அவருடன் காதல் எதுவும் இல்லை” என அவர் கூறியுள்ளார் .