Categories
உலக செய்திகள்

செங்கடலின் இந்த பகுதிக்கு சென்றால் இறப்பு நிச்சயம்…. கடலின் அடியில் அதிசய பகுதி…. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..!!!

விஞ்ஞானிகள் கடலில் அடியில் கண்டுபிடித்திருக்கும் அதிசய பகுதிக்குள் செல்லும் அனைத்து உயிரினங்களும் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடல் உலகிலேயே அதிக ஆபத்து கொண்ட உப்பு தன்மை அதிகம் உடைய கடலாக இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் செங்கடல் பகுதியில் ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி தானியங்கி எந்திரத்தை செங்கடலின் அடியில் பயணிக்கச் செய்துள்ளனர். சுமார் 10 மணி நேரங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் கடைசியில் அந்த கடலின் அடியில் 1.1 கிலோ மீட்டர் அடி ஆழத்தில் அதிசயமான ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஆக்ஸிஜன் வாயுவே இல்லை. அந்த பகுதி முழுக்க உப்பு தன்மை நிறைந்திருந்துள்ளது. பிறப்பகுதியில் இருக்கும் உப்பின் அளவை காட்டிலும் அந்தப் பகுதியில், மூன்று முதல் எட்டு மடங்கு அதிகம் இருந்திருக்கிறது.

மேலும், அந்த பகுதி முழுக்க விசத்தன்மையுடைய ஹைட்ரஜன் சல்பேட் என்னும் வேதிப்பொருளும் கலந்திருந்துள்ளது. எனவே, இந்த பகுதிக்குள் செல்லும் எந்த உயிரினமும் உயிருடன் திரும்புவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு கடல் வாழ் உயிரினங்களுக்கு மரணத்தை உண்டாக்கும் அதிக ஆபத்தான அதிசயப் பகுதியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கும் நிகழ்வு கடல்சார் ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |