நாடும் முழுவதும் நேற்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிக வருமான வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகராக ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினி சார்பில் மகள் ஐஸ்வர்யாவிடம் விருது வழங்கினார். அதேபோல தவறாமல் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த அர்சு விழாவில் பாராட்டப்பட்டது. மேலும் விருது பெற்ற நடிகர் ரஜினியை பலரும் பாராட்டி வருகின்றனர்.