பிரபல நடிகை தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த வருடம் விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் அறிவித்தனர். அதன் பிறகு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா பாடலுக்கு நடிகை சமந்தா ஆடிய ஓ சொல்றியா பாடல் செம ஹிட்டான நிலையில், நடிகை சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.
இவர் அண்மையில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் நாக சைதன்யாவை பிரிந்தது தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நடிகை சமந்தா என்னையும் நாகசைதன்யாவும் ஒரு தனி அறையில் அடைத்து வையுங்கள். ஆனால் கூர்மையான பொருட்களை மட்டும் அறையில் வைக்காதீர்கள். இந்த பதில் போதுமா…? என்று மிகவும் கோபமாக கூறியுள்ளார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஷாக்கான நிலையில், மிகவும் கோபக்காரி ஆக இருப்பார் போல என கிசுகிசுத்துக் கொண்டனர்.