உலகிலேயே முதன்முறையாக மிகப்பெரிய செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 180 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வீட்டில் இருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேயர்கள் Chess Olimpiad, Live chess, chess24.com ஆகிய இணையதளங்களின் வாயிலாக போட்டியியை காணலாம். இதற்காக பிரத்தியேகமான உருவாக்கப்பட்டுள்ள மொபைல் செயலி மூலமாகவும் இந்த தொடரை காணலாம் என தொழில்நுட்ப பணிகள் கண்காணிப்பாளர் ஆனந்த் பாபு தெரிவித்துள்ளார்.