Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதியா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது பயணங்களுக்கு ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். இதில் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்லாமல் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் ரயிலைப் பிடிக்கலாம்.

நீங்கள் ரயில்வே ஸ்டேஷனை மாற்றுவதற்காக ரயில்வே நிர்வாகம் எந்த அபராதமும் வசூல் செய்யாது. போர்டிங் பாயிண்ட் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஐ ஆர் சி டி சி தளத்தில் புதிய வசதி உள்ளது. அவ்வாறு மாற்றாமல் இருந்து வேறு ஸ்டேஷனில் ஏறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஐ ஆர் சி டி சி இந்த புதிய வசதி பயண முகவர்கள் மூலமாக அல்லது பயணிகள் முன்பதிவு முறை மூலமாக அல்லாமல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இதனைத் தவிர போரடிங் ஸ்டேஷன் மாற்றத்தை VIKALP என்ற ஆப்ஷனிலும் செய்ய முடியாது என்பதை பயணிகள் கருத்தில் கொள்ளவும். மேலும் போரடிங் ஸ்டேஷனில் மாற்றம் செய்ய விரும்பினால் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் மாற்றி விட வேண்டும். அதனைப் போலவே ஐ ஆர் சி டி சி விதிகளின்படி போர்டிங் ஸ்டேஷனில் ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.

Categories

Tech |