தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தினகரன், ஹரி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தார் மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.