மின்கம்பம் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயர் தப்பினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மகாராஜபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்று உயிர் தப்பினார். லாரி மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது.
இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் மீட்பு வாகனம் மூலம் லாரியை எங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.