Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ஜோதிடரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சாந்தி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 18-ஆம் தேதி ஜோதிடம் பார்ப்பதற்காக சங்கர் கேரளா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சங்கர் வீட்டை விட்டு வெளியேறி கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி தூக்கில் சடலமாக தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |