Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் முறிந்து விழுந்த ராட்சத மரம்”…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!

ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.

நீலகிரி மாவட்டத்தில் சென்ற இரண்டு வாரங்களாகவே தென்மேற்கு பருவ மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னூர், எல்லநெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரம் கனமழை பெய்துள்ளது. மேலும் நடுவட்டம், மசினகுடி, கேத்தி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் பழமையான ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதையடுத்து அங்கே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. இதை அடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினார்கள்.

Categories

Tech |