Categories
தேசிய செய்திகள்

இன்று மாளிகையிலிருந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்த்….. நாட்டு மக்களுக்கு நன்றி….!!!!

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர், “நாட்டு மக்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன். தங்கள் கிராமம், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இளைஞர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |