Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம்…. 9 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனா நாட்டில் வடமேற்கு பகுதியில்  கான்சு என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள ஜிங்தாய் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று  இயங்கிக் கொண்டிருந்தது. இந்த சுரங்கத்தில் நேற்று காலை  தொழிலாளர்கள் வழக்கமாக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை தொடர்ந்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 16 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |