Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவெற்றியூரில் மர்ம வாயு கசிவு…. அவதியில் பொதுமக்கள்…. ஆய்வு மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ க்கள்….!!!!!

சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காற்றில் ஏற்பட்ட மர்ம வாயு கசிவினால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உயரமான குடியிருப்புகளில் தெர்மோபாஸ்னல் சாமியார் என்னும் நவீன பொருத்தி காற்றில் வாயு கலப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடசென்னை எம்பி கலாநிதி, வீரசாமி திருவெற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர், திமுக தனி அரசு மணலி மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் உள்ளிட்ட குழுவினர் மணலில் மத்திய அரசு நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பொதுமக்கள் நலன் கருதி இருக்கிறதா என கவனிக்கவும் முறையாக அவற்றை பராமரிக்கவும் குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |