தமிழகத்தில் பள்ளிகளில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை உடனடியாக ceoவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி, பூச்சி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை பற்றாக்குறை, மாணவர்கள் சேர்க்கை உள்ளூர் விடுமுறை உள்ளிட அனைத்துக்கும் சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பள்ளி அறைக்கு வர வேண்டும். மாணவர்கள் மோதிரம் அணியவும், ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும். மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியில் அனுப்பி வைக்க கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.