இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது மேலும் நீட்டிக்க படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி இருக்கின்றது.
மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் நாளை முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதி இருப்பதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது