தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து அதை பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் பொருத்தி 2019 ஆம் வருடம் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரே ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும்.
மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல ஓய்வூதியர்களுக்கு 81 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வையும் உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு விரைவில் தீர்வு காண வலியுறுத்தியும் அனைத்து மண்டல போக்குவரத்து கழக அலுவலகங்களும் நாளை ஏ ஐ யூ டி சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்கின்றார்கள் என அதில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐயூசி சங்கத்தினர் மட்டுமே கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுக அதிமுக கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை ஒருவேளை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து. அவர்களும் கலந்து கொள்ளும் பட்சத்தில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.