அரிசி மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விரிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரிசி உள்ளிட்ட லேபிள், பேக்கிங் செய்யப்பட்ட பல உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது குறித்து தவறான செய்திகள் பரவி வருகிறது. ஜிஎஸ்டி மன்றத்தின் உடைய 45 ஆவது கூட்டத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கேரளம் கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்ற நிலையில் தமிழகம் உறுப்பினராக இடம் பெறவில்லை.
அரிசி, தயிர், மோர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மீதான வரிகளை விதிக்க மன்ற கூட்டத்தில் முன்மொழிவு வைக்கப்பட்டபோது தமிழக அரசு அதற்கு ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியது. இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இதனை தொடர்ந்து ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி மன்றத்தின் 47-வது கூட்டத்தில் 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை இருந்தது. தமிழக அரசு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்த பிறகும் ஜிஎஸ்டி மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் வரிகள் விதிக்கப்பட்டன என்று கூறியுள்ளார்.