Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொப்பையை குறைத்து” உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்” முள்ளங்கி சப்பாத்தி..!!

தேவையான பொருட்கள்

முள்ளங்கி  –  3

பச்சை மிளகாய்  –  2

கொத்தமல்லித்தழை  –   சிறிதளவு

மிளகாய் தூள்  –   தேக்கரண்டி

உப்பு   –   தேவையான அளவு

எண்ணெய்  –   சிறிதளவு

கோதுமை மாவு   –   2 கப்

 செய்முறை :

முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். முள்ளங்கியைத் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். முள்ளங்கி துருவலை பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும் .ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல் ,பச்சைமிளகாய் இவற்றை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி ,சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும். வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தேக்கரண்டி முள்ளங்கி கலவையை வைத்து மூடிக்  கனமான சப்பாத்தியாக இடவும் .சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும் சுவையான முள்ளங்கி சப்பாத்தி தயார். இவற்றை சாப்பிட்டால் தொப்பை குறையும்.

Categories

Tech |