மடிக்கணினி விற்பனையாளர் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் புதிதாக லேப்டாப் வாங்குவதற்காக ஒருவர் ஆன்லைனில் ரூ. 56,500-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வாங்கியும் லேப்டாப் அனுப்பாமல் கடைக்காரர் தாமதம் செய்து வந்துள்ளார். இதேபோன்று சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் தருவதாக கூறி ரூபாய் 1 லட்சம் வாங்கியுள்ளார்.
இவரைப் போன்று பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததால் 20-க்கும் மேற்பட்டோர் திடீரென லேப்டாப் விற்பனை செய்யும் கடையை முற்றுகையிட்டு கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கடைக்காரரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.