Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி….. உயிரைக் காப்பாற்றிய தமிழிசை….. குவியும் பாராட்டு….!!!!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த விமானத்தில் சக பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர் ஆவார் . நேற்று வாரணாசியில் இருந்து டெல்லி வழியாக சென்ற இண்டிகோ விமானத்தில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நடுவானில் சகப் பயணி ஒருவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்து அவரைப் பார்த்த சக பயணிகள் கதறி போயினர். இதைப் பார்த்த தமிழிசை சௌந்தர்ராஜன் நெஞ்சுவலி ஏற்பட்ட பயணிக்கும் முதலுதவி அளித்து அவரின் உயிரை காப்பாற்றினார். பயணி நன்றி கூறிய நெகிழ்ச்சி மிக்க காட்சியை பார்த்து அங்கிருந்தவர்கள் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றன. பயணம் செய்த பலரும் அவருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Categories

Tech |