Categories
தேசிய செய்திகள்

காலையில் திருமணம்….. மாலையில் மணமகன் திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. இவருக்கும் அதேகிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

ஆனால் சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த உறவிர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |