Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. சிரியாவில் தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவம்…. 7 பேர் பலி…..!!

சிரியாவில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா நாட்டில் உள்ள அரசு படைகளுக்கும்  கிளர்ச்சி அமைப்புகளுக்கு இடையே அடிக்கடி சண்டை முழ்வது வழக்கம். இதனால் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கடைசி இருப்பிடமாகும். அங்குள்ள இத்லீப் மாகாணம் அல்-கொய்தா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களிடமும், அலெப்போ மாகாணம் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களிம் இருக்கிறது. இந்த 2 மாகாணங்களையும் கைப்பற்ற ரஷ்ய ராணுவ படைகளின் உதவியோடு சிரியா ராணுவம் அங்கு அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இத்லீப் மாகாணத்தில் உள்ள ஜிஸ்ர் அல்-ஷோகர் நகரில் நேற்று காலை ரஷ்ய ராணுவம் பயங்கரமான வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் போர் விமானம் சரமாரியாக குண்டுகளை வீசியதில், ஒரு குண்டு அங்குள்ள வீட்டின் மீது விழுந்ததில் அந்த வீடு தரைமட்டமானது. இந்த சம்பவத்தினால் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |