இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஒரு நம்பரை பதிவிட வேண்டும். அப்போதுதான் பணத்தை எடுக்க முடியும்.
அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் இனி பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம் மூலமாக எடுக்கும் போது ஓடிபி நம்பர் வரும். அதனை பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும். குறிப்பாக வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு தான் இந்த ஓடிபி அனுப்பப்படும்.
இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு நாடு முழுவதும் 22,224 வங்கி கிளைகளும் 63,906 ஏடிஎம் மையங்களும் உள்ளன. இந்நிலையில் ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மாற்றியுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.