ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஐஸ்வர்யா கோவிலுக்கு சென்றதை பார்த்த நெட்டிசன்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் சென்ற 2004 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்கள்.
இதன் பின்னர் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த நிலையில் ஐஸ்வர்யா காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கின்றார் மேலும் அம்மனுக்கு தீபம் ஏற்றி பரிகாரமும் செய்து இருக்கின்றார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என கேப்சன் கொடுத்திருக்கின்றார். இதை பார்த்த இணையதளவாசிகள் நீங்களும் தனுஷ் அண்ணனும் விரைவில் சேர்ந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் எனவும் எப்போதும் பக்தி இருக்க வேண்டும் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தெய்வத்தின் அருட்பெரும் உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நீங்களும் தனுஷ் சாரும் நன்றாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.